ரிஷாட்டை கைது செய்தால் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும் – சஜித்!

அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகவும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடி மறைப்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ரிஷாட் பதியுதீனை கைது செய்யும் முயற்சி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது.

ரிஷாட் கைது செய்யப்பட்டால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும்.

அதேவேளை , நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு நீதித்துறை துணைபோகாது என்று நாம் நினைக்கின்றோம்.” என்றார்.

Be the first to comment

Leave a Reply