யாழில் தங்கத்தின் இன்றைய பெறுமதி எவ்வளவு தெரியுமா?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்கின்றது.

இலங்கையிலும் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்னும் உயர்வடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை கடந்த வாரம்  அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்கள் சற்றுச் சரிவான நிலையை அடைந்து காணப்பட்டது.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 300 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அந்த வகையில், யாழ்ப்பாணத்தில்  22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  95 ஆயிரத்து 150 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 94 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply