முழுநாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளது – பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹன

நாட்டின் தற்போது  ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையில் முழுநாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளது என போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.

இவவாறு அறிவித்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

தனியார் மற்றும் அரச நிறுவனங்களை வழமை போன்று இயக்க முடியும். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது நிறுவனங்களின் பிரதானிகள் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் பணிக்கு வரக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் .

இவ்வாறு வரும் ஊழியர்கள் முகக்கவசம் அணிதல் ,சமூக இடைவெளிகளை பேணுதல் போன்ற சுகாதார சட்டங்களை மேற்கொள்ளுதல் மேலும் அடிக்கடி உடல் வெப்பநிலையை  பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply