பிரித்தானியர்கள் இனி இந்த நாட்டிற்குள் நுழைய தடை .! அதிரடி அறிவிப்பு

இங்கிலாந்து,வேவ்ஸ்,ஸ்கட்லாந்து,வடக்கு அயர்லாந்து, ஆகிய நான்கு நாடுகளை இணைத்து உள்ளடக்கியதுதான் பிரித்தானியா.

இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள ஹாட்ஸ்பர்ட்களில் இருக்கும் மக்கள் வேவ்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதிப்பதாக அந்நாட்டு முதலமைச்சர் Mark Drafefords அறிவித்துள்ளார்.

அதிக கொரோனா ஆபத்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பிரித்தானியாவின் மற்றைய நாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இங்கிலாந்து அரசாங்கம் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வேவ்ஸ் முதலமைச்சர் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் போரிஸ் ஜோன்சனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காத  நிலையில் வேவ்ஸ் முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பிரித்தானியாவின் ஹாட்ஸ்பர்ட்களில் இருந்து வரும் மக்களுக்கு வேவ்ஸ் எல்லைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்தின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் ஸ்கட்லாந்தின் மத்திய பகுதி என அனைத்திற்கும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply