தெஹிவளையில் மீன் விற்கும் பெண்ணுக்கு கொரோனா.!

தெஹிவளை கரகம்பிடிய வாராந்த சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரத்மலானை கந்தவள பகுதியில் வசிக்கும் 63 வயதான பெண் ஒருவர்  காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கல்போவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை PCR பரிசோதனைக்கு உற்படுத்தியதில் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பெண் கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.இந்த பெண்ணிடம் மீன் கொள்வனவு செய்தவர்கள் இருப்பின் வைத்தியசலையை நாடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பெண் தெஹிவளையில் உள்ள தனியார் பல் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் வாழும் சந்துங்கம நெஞ்சிலுவை வீட்டுத்தொகுதியில் 10 வீடுகளை சேர்ந்த 34 பேர் சுயதனிமைக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணுடன் நெருங்கி பழகிய 4 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் மாதம்பே தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply