தக்க பதிலடியா..?அனைவரது எதிர்ப்புக்களுக்கும் பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட முத்தையா முரளிதரன்…

இலங்கை கிரிக்கட் அணியில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மீது தற்பொழுது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவரால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுழல் பந்து வீச்சு என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் முதலாவது நபர் என்றால் அவர் முத்தையா முரளிதரன் தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், அவர் தனது சுழல் பந்து திறமையால் பலரையும் கவர்ந்தவர் என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

முத்தையா முரளிதரன் தனது வாழ்வில் எத்தனை இன்னல்களுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கட் அணியில் ஒரு சுழல் பந்து வீச்சாளராக இடம்பிடித்தார், அத்துடன் அதற்காக அவரால் செய்யப்பட்ட தியாகங்கள் என்பனவற்றை தொகுத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க இந்திய திரைப்பட நிறுவனம் ஒன்று முன்வந்திருந்தது.

ஆரம்பத்தில் முத்தையா முரளிதரன் அதற்கு இணக்கத்தை தெரிவிக்க மறுத்திருந்த போதிலும் பின்னர் ஒப்புக்கொண்டார்.

குறித்த திரைப்படத்திற்கு 800 என பெயரிட்டு கதாநாயகனாக விஜய் சேதுபதியையும் ஒப்பந்தம் செய்தது அந்த திரைப்பட நிறுவனம்.

இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு தான் தாம் மகிழ்ச்சியாக இருந்த ஆண்டு என முத்தையா முரளிதரன் தெரிவித்ததாகவும், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை அவர் வரவேற்றிருந்தார் எனவும் தெரிவித்து தமிழக அரசியல்வாதிகள் முரளிதரனுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு, விஜய் சேதுபதிக்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்றைய தினம் முத்தையா முரளிதரன் அறிக்கை தக்க பதிலடியா.

அந்த அறிக்கை கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply