சந்தாங்கேனி மைதான நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் றிஸ்லி முஸ்தபா!

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் எம்.ஆர் பெளடேசனின் தலைவர் றிஸ்லி முஸ்தபா மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் இடையேயான நேரடி சந்திப்பு நேற்று 15 ஆம் திகதி ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது கல்முனை சந்தாங்கேனி மைதான நில அபகரிப்பு தொடர்பாகவும் அதன் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி மற்றும் கல்முனை தொகுதி உள்ளக வீதி அபிவிருத்தி, சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு,இளைஞர் கழகம் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், சாய்ந்தமருது பொலிவோரியன் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு நிதியுதவி செய்து தருவதாகவும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

மேலும் மாளிகைக்காடு பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பாக கரையோர பாதுகாப்பு திணைக்கள தவிசாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply