கொரோனா ஆபத்து அதிகமாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

நாட்டில் எப்பகுதியிலாவது கொரோனா தொற்றுக்கான ஆபத்து அதிகமாக இருந்தால் அப்பகுதிகளில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டாலும், அது ஆபத்து நிறைந்த பகுதியாகவே கருதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்தும், 46 பேர் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலும் மீனுவாங்கொட,கம்பஹா,மற்றும் கட்டுநாயக்க பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் அவர்களில் இருவர் கொழும்பில் வசிப்பவர்கள் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply