இலங்கையில் திருமண வீட்டிற்கு சென்ற கொரோனா நோயாளியால் ஆபத்து?

திருமண வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மொரட்டுமுல்ல மற்றும் வில்லோராவத்தை பிரதேசத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருமண வீட்டிற்கு சென்ற பெண்ணால் பலருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின்கு குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply