ஆட்பதிவுத் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்காக 0115226126/ 011 5226115 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை covid-19 வைரஸ் தொற்று நோய் பரவும் காலப்பகுதியில் பொதுவான நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் அமைந்துள்ள மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகின்றமை பற்றிய அறிவிப்புக்கு கட்டுப்பட்டு சேவைகளை வழங்கும் பொருட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும் பிராந்திய அலுவலகங்களும் பொதுமக்களுக்காக திறந்து இருக்கும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply