ஊடகவியலாளர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பல்! முன்னெடுக்கப்பட்டது மாபெரும் போராட்டம்

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடக அமைப்புகள் இணைந்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்த போராட்டத்தின் போது முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனையடுத்து ஊர்வலமாக சென்று முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

அத்துடன் முள்ளிவளை வன பாதுகாப்புத் திணைக்களம் சென்று அங்கும் பொறுப்பான அதிகாரியிடம் தாக்குதல் தொடர்பான மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை கள்ள மரம் வெட்டும் துறையா? என வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் ஊடகவியலாளர்கள் ஏந்தியிருந்தனர்.

கடந்த 12.10.2020 அன்று சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டனர். இவ்வாறான செயற்பாடு குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரோ வனவளத் திணைக்களமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்ப்படுகின்றது.

இந்நிலையிலேயே இந்த சட்டவிரோத செயற்பாட்டை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் மீதே வன்முறைக் கும்பல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.

Be the first to comment

Leave a Reply