நாட்டில் 5,170 பேருக்கு கொரோனா

 மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மேலும் 130 பேருக்கு நேற்று (14) தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

இதனடிப்படையில் கொரோனா கொத்தணியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 1,721 ஆக அதிகரித்துள்ளது.

இதன்பிரகாரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,170 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 3,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply