27 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் தற்கொலை – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா – கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 7.00 மணியான காலப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் கணவர், 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் காலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையிலே குறித்த குடும்ப பெண் வீட்டில் தனிமையாக இருந்துள்ளார்.

மீண்டும் காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பின், இச்சம்பவம் குறித்து கிராம சேவகருக்கு தகவல் வழக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சடலத்தினை அவதானித்துடன், வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

மேலும், குறித்த பெண்ணின் தாயார், தனது மகள் கடந்த சில நாட்களுக்கு முன் கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படுமென தெரிவித்துள்ளதாக பெண்ணின் தாய் கூறியுள்ளார்.

27 வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply