10 இலட்சம் விலங்குகளை கொல்ல முடிவு!

அமெரிக்கா – டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் மிங்க் எனப்படும் கீரி வகையை சேர்ந்த விலங்குகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகளவான எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

அமெரிக்காவில் உட்டா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் உள்ள பண்ணைகளில் 12,000 மிங்குகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதேபோல டென்மார்க்கிலும் ஏராளமான மிங்கு விலங்குகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மிங்குகளுக்கு கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவிவருகின்ற நிலையில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மிங்க் விலங்குகளை கொலை செய்ய டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மிங்குகளை கொன்றுவிடுமாறு உள்நாட்டு பண்ணைகளிடம் டென்மார்க் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மிங்க் பண்ணைகளில் டென்மார்க் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனாலும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் கொரோனா தொற்று பாதித்த மிங்குகளின் எண்ணிக்கை இம்மாதம் முதல் கணிசமாக உயர்ந்துள்ளது.

பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் இதற்கான தீர்வு கிட்டவில்லை எனவும், இதன் காரணமாக மிங்க் விலங்குகளை கொல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply