ரிஷாத் பதியுதீன் இல்லை. கைது செய்ய சென்ற CID குழுவினர் அவரின் கணக்காளரை கைது செய்தது .

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய சென்ற குற்றவியல் புலனாய்வுத் துறை (CID ) அதிகாரிகள் குழு, அவரின்  கணக்காளர், அழகரத்னம் மனோரஞ்சனை கிரிலப்பனையில் வைத்து   கைது செய்துள்ளது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.டி.ஐ.ஜி அஜித் ரோஹானா இது பற்றி  கூறுகையில், 

எம்.பி. பதியுதீன் உட்பட மூன்று சந்தேக நபர்களில் மனோரஞ்சனும் சட்டமா அதிபரால் கைது செய்ய உத்தரவிடப்பட்ட ஒருவராவர்.

எம்.பி. பதியுதீன் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் மற்றும் இரண்டு ஆயுதங்களையும் சிஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக எஸ்.டி.ஐ.ஜி ரோஹானா மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் காவல்துறைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிஐடியின் ஆறு குழுக்கள்  தற்போது எம்.பி. ரிஷாத் பதியுதீனைத் தேடுகின்றன.

“நேற்று பிற்பகல் முதல்  6 பொலிஸ் குழுக்கள் அவரைத் தேடுகின்றன. அவர் வீட்டில் இல்லை. அவரை விரைவில் கைது செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பொது நிதியை கிரிமினல் முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் எம்.பி. ரிஷாத் பதுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர்  பணித்து இருந்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக 222 சி.டி.பி பேருந்துகளில் புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு இடம்பெயர்ந்தவர்களை  கொண்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று கைது செய்யப்பட்ட அலகரத்னம் மனோரஞ்சன், தேர்தலின் போது இடம்பெயர்ந்தோரை கொண்டு செல்வதற்கான திட்டத்தின் பொறுப்பான பதியுதீனின் கணக்காளராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. 

Be the first to comment

Leave a Reply