ரிசாத் தலைமறைவு – ஆயுதங்களுடன் ரிசாத்தின் சொகுசு வாகனங்கள் மீட்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்வதற்கு 06 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

எனினும் நேற்று மாலைவரை அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

ரிஷாத் பதியுதீன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்கு தலைமறைவாகி இருக்க உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில், அவரது மெய்ப் பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை வெள்ளவத்தை பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையின்போது, ரிஷாத் பதியுதீன் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரு நவீன வாகனங்கள் மீட்கப்பட்டன.

அந்த வாகனங்களிலிருந்து இரு கைத்துப்பாக்கிகள், 2 மெகசின்கள் மர்றும் 48 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அவ்வாகனங்களின் சாரதிகளாக செயற்பட்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த 56, 45 வயதுடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அந்த ஆயுதங்கள் யாருக்கு சொந்தமானவை, எவ்வாறு அந்த வாகனங்களுக்குள் வந்தன உள்ளிட்ட முழுமையான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply