யாழில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

 யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றை அண்மித்த பகுதியிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட சுமார் 4 கிலோ வெடிபொருட்களும் 10 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply