தொண்டமானின் இல்லத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வெவன்டன் பகுதியில் உள்ள பூர்விக இல்லத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வெவன்டன் பகுதியில் உள்ள பூர்விக இல்லத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் கூரைப்பகுதி முழுமையாக எரிந்துள்ளதோடு, உபகரணங்கள் சிலவும் தீக்கிரையாகியுள்ளன.

இதனையடுத்து, நுவரெலிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, இது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply