கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பேரூந்துகள் கண்டுபிடிப்பு .!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் பயணித்த 6 பேரூந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் இதனை உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

நங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பேரூந்துகள் பல உள்ளன. அதில் ND 4890 என்ற இலக்கம் கொண்ட கொழும்பு-மெதகம சென்ற பேரூந்தில் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.

அத்துடன் ND 2350 என்ற இலக்கத்தை கொண்ட மாக்கும்புற-காலி சென்ற பேரூந்து ஒன்றிலும் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.

அதேபோல ND 549 என்ற இலக்கம் கொண்ட அம்பலாங்கொட பேரூந்தில் கடவத்த சென்ற கொரோனா நோயாளி ஒருவரும் இருந்துள்ளார்.

அத்துடன் கொழும்பு-யாழ்ப்பாணம் சென்ற 6503 என்ற இலக்கம் கொண்ட பேரூந்தில் கொரோனா நோயாளியொருவர் பயணித்துள்ளார்.

எல்பிட்டிய-கொழும்பு சென்ற ND 9788 என்ற இலக்கம் கொண்ட பேரூந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலி-கடவத்த  சென்ற NF 7515 என்ற பேரூந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அணைத்து நெடுஞ்சாலை பேரூந்துகளும் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அதிசொகுசு பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னர் அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply