கொரோனா அச்சம்- அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு- இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர்!

இலங்கையில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து திரை அரங்கங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டோர் 31ஆம் திகதி வரை அனைத்து திரை அரங்கங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் ஜெயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply