இலங்கையில் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் கட்டில்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 13 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கான 1712 கட்டில்கள் காணப்பட்டன.

அதில் 1542 கட்டில்கள் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெருவவர்களில் 127 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த கொரோனா நோயாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 1415 நோயாளிகளும் மீனுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அகப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வட மாகாணத்தில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply