இலங்கையில் அச்சுறுத்தும் கொரோனா! நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 13 வைத்தியசாலைகளில் 6 இல் தற்போது நோயாளர்கள் அனுமதிக்கப்படக் கூடிய எண்ணிக்கையை விடவும் அதிகரித்துள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி ஐ.டி.எச் வைத்தியசாலை, வெலிக்கந்த வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு வைத்தியசாலை, கம்புறுகமுவ வைத்தியசாலை, தெல்தெனிய வைத்தியசாலை, காத்தான்குடி வைத்தியசாலை ஆகியவற்றில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

13 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளுக்கென 1712 கட்டில்கள் உள்ள நிலையில் அவற்றில் 1544 கட்டில்களில் நோயாளர்கள் இருப்பதாகவும் 168 கட்டில்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply