அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள கற்களை அகற்றி சுத்தப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக கடந்த தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவிற்கமைய இதன் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் களப்புக்கள் எவையும் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் வட்டுவாகல் நந்திக்கடல் ஆற்றுப்பகுதியினை ஆழப்படுத்து மாறு கடற்தொழிலாளர்கள் பல தடவைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுமதியுடன் கடந்த 02.08.2020 அன்று தோண்டப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோது தேர்தல் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கடற்றொழில்  அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவினால்  ஒதுக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட்டுவாகல் கிராமிய கடற்றொழில் கூட்டுறவுச்சங்கத்தின் தலைமையில் செல்வபுரம் மற்றும் கோயிற்குடியிருப்பு ஆகிய கிராமிய கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்கள் நந்திக்கடல் களப்பின் நீர்ப்போக்குவரத்துக்கு தடையாக உள்ள களப்பினருகிலுள்ள வட்டுவாகல் பாலத்தின் கீழ் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள கற்களை அகற்றி சுத்தப்படுத்தல் செயற்றிட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply