யாழில் பட்டப்பகலில் அரங்கேறிய அராஜகம்! ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார்

இணுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இனுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளனர்.

இவ்வாறு நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அயலவர்கள் உரிமையாளருக்கு தெரிவித்ததையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்ற உத்தியோகத்தர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகைகளும் 20 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிசார் திருட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply