ஓடி ஒளிந்து கொண்ட ரிஷாட்? சல்லடை போடும் பொலிஸார்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு கொழும்பிலும், மன்னாரிலும் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இரண்டு இடங்களிலும் அவர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இதுவரையில் அவர் கைதாகவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பொது நிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார்.

Be the first to comment

Leave a Reply