மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா நோயாளர்கள் மேலும் 17 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 05 பேருக்கும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 12 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கே புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1608 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5038 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 1668 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 3357 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply