பொது போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இலக்கங்களை குறித்துக் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் குறித்த வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து ஆடைத் தொழிற்சாலை உள்ளடங்களான அனைத்து நிறுவனங்களிலும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும் தொழிற்சாலை ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர முகவரி மற்றும் தற்காலிக முகவரி, தொலைபேசி இலக்கங்களை ஊழியர்கள், நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஊழியர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறில்லை எனின், பல்வேறு தொழிற்சாலை ஊழியர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பார்களாயின், அது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply