யாழில் கடைக்குள் புகுந்து அனைவருக்கும் முன்னால் பெண்ணின் 4 பவுன் சங்கிலி அறுப்பு!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவர் 4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

யாழ். நகரின் மத்தியில் உள்ள சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை நேரம் பெண் ஒருவரே விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதன் சமயம் ஓர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவர் இறங்கிச் சென்று 20 ரூபாவிற்கு பீடி கோரியுள்ளார்.

இவ்வாறு கோரிய பீடியை வழங்கிய சமயம் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண் கழுத்தில் இருந்த 4 பவுண் தங்கச் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு வீதியில் இயங்கு நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply