தனிமைப்படுத்தலில் உள்ளோரின் வீட்டுக் கழிவுகள் அகற்றப்படும் முறை

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரின் வீடுகளிலுள்ள கழிவுகளும் சுகாதார முறைகளுடன் அகற்றப்படவுள்ளன.

தனிமைப்படுத்தலிலுள்ள நபர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியன பிரத்தியேகமாக அகற்றப்பட வேண்டும் என மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், உணவு கழிவுகளை இயலுமானவரை வீட்டுத்தோட்டங்களில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபையின் பணிப்பாளர் நலீன் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறில்லை எனின் 72 மணித்தியாலங்களின் பின்னரே கழிவகற்றும் ஊழியர்களிடம் வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தவிர மீள்சுழற்சி செய்யப்படும் பொருட்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் பூர்த்தியானதன் பின்னர், 72 மணித்தியாலங்கள் கடந்த பின்னரே அவற்றை மீள்சுழற்சிக்காக கையளிக்க முடியும் என மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply