மஹிந்த தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய குழு

2021 பெப்ரவரி 04ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

அமைச்சரவை உப குழுவின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சர்கள் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜனக பண்டார தென்னக்கோன், கெஹலிய ரம்புக்வெல்ல, சமல் ராஜபக்‌ஷ, டளஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் மேற்படி குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள் நாட்டலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply