கருணாவுக்கு விசேட பதவி ஒன்றை வழங்கிய பிரதமர் மஹிந்த!

முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விசேட பதவி ஒன்றை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதமரின் மாவட்ட இணைப்பாளராக கருணா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான நியமனக் கடிதம் கருணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் கருணா, பிரதமர் மஹிந்தவின் மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply