கால்பந்து நட்சத்திரம் ரொனால்ட்டோவிற்கு கொரோனா!

போர்த்துக்கல்லின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரொனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

தற்போது ஜுவென்டஸ் அணியின் தாக்குதல் வீரராக ஆடி வரும் 35 வயதான ரொனால்டோ, யுஃபா நஷன்ஸ் லீக்கில் புதன்கிழமை போர்த்துக்கல்- சுவீடன் அணிகளிற்கிடையிலான ஆட்டத்தில் பங்கேற்கவிருந்தார்.

எனினும், கொரோனா தொற்றையடுத்து பயிற்சி முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ரொனால்டோ தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில்,

“கிறிஸ்டியானோ ரொனால்டோ கோவிட் -19 க்கான நேர்மறையான சோதனைக்குப் பிறகு தேசிய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே அவர் சுவீடனை எதிர்கொள்ள மாட்டார்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொனால்டோ தொற்றிற்குள்ளானதையடுத்து, அணியின் ஏனைய வீரர்கள் இன்று காலை பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். யாரும் தொற்றிற்குள்ளாகவில்லை.

Be the first to comment

Leave a Reply