விடுதலைப்புலிகளின் தலைவர் விடுத்த அழைப்பு – வெளிப்படுத்திய எரிக்சொல்ஹெய்ம்

இலங்கைக்கான சமாதான அனுசரணைப்பணியில் நோர்வே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே வலியுறுத்தியிருந்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

ஐ.பி.சி தமிழுக்காக எரிக்சொல்ஹெய்ம் மற்றும் பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி கிருபாகரன் ஆகியோருடன் ஊடகர் நடேசன் நடத்திய நேர்காணல் நிகழ்வின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கான சமாதான அனுசரணைப்பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென சிறிலங்காவின் அப்போதைய அரசதலைவர் சந்திரிகா விரும்பியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

எனினும் இலங்கைக்கான அனுசரணை பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதன் அதனடிப்படையிலேயே நோர்வே இந்தப்பணியில் இறங்கியதாகவும் எரிக்சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அனுசரணைப்பணிக்கு அழைப்பு விடுப்பதற்காக 1998 ஆம் ஆண்டில் நோர்வேயில் உள்ள தனது பணியகத்துக்கு வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அங்கு வைத்து இதற்குரிய நேரடி அழைப்பை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply