நீதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் மற்றும் ஆலோசகராக முன்னாள் உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த இப்ராஹீம் அன்சார் அவர்கள் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவார்.

பல வருடங்கலாக சவுதி அராபியா மற்றும் மலேசிய நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக கடமையாற்றியுள்ள இப்ராஹீம் அன்சார் அவர்கள், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply