சொகுசு பஸ் ஒன்றின் சாரதி உட்பட மூவருக்கு கொரோனா!

மதுகம பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர்கள் மூவர் இனங்காணப்பட்டுள்ளதாக மதுகம குடும்ப சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மதுகம – கொழும்பு அதிவேக வீதியில் சேவையில் உள்ள சொகுசு பஸ் ஒன்றின் சாரதி, அதன் நடத்துனர் மற்றும் பஸ்ஸின் உரிமையாளர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

பஸ்ஸின் உரிமையாளர் மதுகம நவுன்துடுவ பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில், நடத்துனர் மதுகம பந்துகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பஸ்ஸின் சாரதி மதுகம, ஒவிடிகல பிரதேசத்தை சேர்ந்தவர் என சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரும் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் கடந்த தினத்தில் சுய விருப்பத்தின் பேரில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துக் கொண்டதை தொடர்ந்து

நேற்றிரவு (13) அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply