உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தி, இறக்குமதி செலவீனத்தைக் குறைக்கும் உபாயங்கள்!

சுயதொழிலாக பால் பண்ணைத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் ஆராய்கின்றது.

அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக நாம் மாற்ற வேண்டும் என்பதுடன், குறைந்த விலையில் அவர்களுக்குப் பசுக்களை வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பண்ணை வள அபிவிருத்தி சபையுடன் கலந்துரையாடி – பாற் பண்ணை உற்பத்திகளை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கும், தேவையான வசதிகளை மேற்படி தொழில் முயற்சியாளர்களுக்குச் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் எண்ணியுள்ளது.

பண்ணை விவசாயிகள் கடன் கோரிக்கைகளை முன் வைக்கும்போது அதற்கான பிணை நிபந்தனைகளை இலகுபடுத்துவதற்கு வங்கிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளளேன்.

தேக ஆரோக்கியத்துடனான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதும் இதன் முதன்மையான ஒரு நோக்கம் ஆகும்.

Be the first to comment

Leave a Reply