ஐபிஎல் தொடரையே புரட்டி போடும் வாய்ப்பு.. சிஎஸ்கேவிற்கு கிடைத்த செம சான்ஸ்.. எல்லாமே அடியோடு மாறும்!

 

துபாய்: ஐபிஎல் தொடரில் இன்றில் இருந்து மிக முக்கியமான மாற்றங்கள் நடக்க போகிறது. இந்த தொடரில் மோசமாக திணறி வரும் சிஎஸ்கே தனது அதிரடி பாதைக்கு திரும்ப செம வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் பாதியில் வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும். அதாவது ஒரு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரரை இன்னொரு அணிக்கு டிரான்ஸ்பர் செய்ய முடியும். தங்கள் அணி எந்த இடத்தில் வலிமையின்றி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்றப்படி பிற அணியில் இருக்கும் வீரர்களை காசு கொடுத்து வாங்க முடியும். உதாரணமாக பஞ்சாப் அணியில் பவுலர்கள் இல்லையென்றால் சிஎஸ்கேவில் இருக்கும் கூடுதல் பவுலர்களை அந்த அணி காசு கொடுத்து எடுக்க முடியும்.என்ன இதற்கு சில விதிமுறைகள் உள்ளது. விதி 1 – டிரான்ஸ்பர் செய்யப்படும் வீரர், அவர் இருக்கும் அணியில் 2க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்க கூடாது. விதி 2- டிரான்ஸ்பர் மூலம் ஒரு வீரரை வாங்க வேண்டும் என்றால், அவரை வாங்கும் அணிகள் தனியாக பணம் கொடுக்க வேண்டும். அதாவது தங்கள் அணிக்கு என்று ஒதுக்கப்பட்ட பர்ஸில் இருக்கும் பணத்தை கொடுக்காமல் தனியாக கொடுக்க வேண்டும். விதி 3 – எல்லா அணிகளும் 7 போட்டிகளில் விளையாடிய பின்தான் டிரான்ஸ்பர் நடக்கும்

 இன்றுதான் இந்த டிரான்ஸ்பர் நடவடிக்கைகள் தொடங்க உள்ளது. இன்றில் இருந்து அணிகள் வேறு அணியில் இருக்கும் வீரர்களை தங்கள் அணிக்கு மாற்ற முடியும். இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்களின் குறைகளை களைய முடியும். இந்த டிரான்ஸ்பர் முறை மூலம் இனி மீதம் இருக்கும் ஐபிஎல் போட்டிகள் அடியோடு மாற போகிறது என்று கூறுகிறார்கள்.

 முக்கியமாக சிஎஸ்கே அணி பார்மிற்கு திரும்ப இன்று தொடங்கும் டிரான்ஸ்பர் பெரிய அளவில் உதவ போகிறது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாக இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் சிஎஸ்கேவில் இந்திய ஸ்பின் பவுலர்கள் சரியாக பவுலிங் செய்வது இல்லை. இதனால் டிரான்ஸ்பர் முறையில் இந்த வீரர்களை சிஎஸ்கே இன்று குறி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

 முக்கியமாக ஹர்பஜன் போன காரணத்தாலும், ரெய்னா இல்லாததாலும் இரண்டு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளது. இதை நிரப்ப ஆட்கள் தேவை. இவர்களுக்கு மாற்றாக ரஹானே, விராட் சிங் போன்ற வீரர்களை சிஎஸ்கே குறிவைக்கும் என்கிறார்கள். அணியில் ஏற்கனவே நிறைய வெளிநாட்டு வீரர்கள் உள்ளதால் சிஎஸ்கே புதிதாக வெளிநாட்டு வீரர்களை அணிக்குள் எடுக்க வாய்ப்பு இல்லை.

 சிஎஸ்கே எடுக்கிற வீரர்களை பொறுத்து மொத்தமாக இந்த தொடரே மாற போகிறது என்கிறார்கள். சிஎஸ்கே பார்மிற்கு திரும்ப வேண்டும் என்றால் கண்டிப்பாக புதிய வீரர்களை கொண்டு வர வேண்டும். இன்றில் இருந்து அதற்கான பணிகள் தொடங்கும். இன்னொரு பக்கம் சிஎஸ்கே லுங்கி நிகிடி, ஜோஸ் ஹெசல் வுட் போன்ற வீரர்களை வெளியே அனுப்பவும் வாய்ப்புகள் உள்ளது.

Be the first to comment

Leave a Reply