திறந்த மிருக காட்சிசாலையும் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கும் பூட்டு

ரம்புக்கன பின்னவல திறந்த மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் என்பன சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கொவிட்-19 வைரஸ் தொற்று அனர்த்தம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையில் யானைகள் சரணாலயம் மற்றும் மிருகக்காட்சிசாலை என்பன மூடப்படுவதாக மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்ட போதிலும் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply