கொழும்பில் மூடப்பட்ட ஆறு வர்த்தக நிலையங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் பலர் நடமாடியதன் காரணமாக கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றான பொரளையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று காலை ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர், தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் பலர் நடமாடியதன் காரணமாக கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றான பொரளையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கிய பின்னர் இந்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply