ஸ்ரீலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை: மறுக்கிறது இடர் முகாமைத்துவ நிலையம்

பேருவளையில் சுனாமி ஏற்படப் போவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பேருவளை கடற் பிராந்தியத்திற்குட்ட பகுதிகளில் சுனாமி ஏற்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றும் வெளியாகியிருந்தது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் சுனாமி ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளகரையோரப் பகுதிகளில் வாழும் மக்களும் அதனை அண்மித்த பகுதியில் வாழும் மக்களும் இது தொடர்பான அவதானமாக இருக்கும் படியும் அந்த மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் ஊடகங்கள் ஊடாக பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply