பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணை

 பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், சுகயீனமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply