கொரோனா நோயாளியுடன் ஒன்றாக பயணித்த 35 பேருக்கு வலை வீச்சுகொரோனா நோயாளியுடன் ஒன்றாக பயணித்த 35 பேருக்கு வலை வீச்சு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவருடன், கடவத்தையில் இருந்து காலிக்கு சென்ற அதிவேக நெடுஞ்சாலை பஸ்ஸில் பயணித்த 35 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

குறித்த 35 பேரை நேரில் வந்து முன்னிலையாகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருந்த போதிலும் இதுவரையில் ஒருவரும் வராமையினால் பாரிய சிக்கலான விடயமாகும் என சுகாதார வைத்திய அதிகாரி லசந்த உபேசேகர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி கடவத்தையில் இருந்து காலி நோக்கி பயணித்த NB – 7323 என்ற இலக்கம் கொண்ட பஸ்ஸில் காலிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply