கொரோனா அச்சுறுத்தலையடுத்து மன்னாரின் பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு கிராமங்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மீண்டும் கிராமங்கள் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் மன்னாரின் பல பிரதேசங்களிலும் இன்று காலை 7.30 மணி முதல் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகர சபை ஆகியவை இணைந்து கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது மன்னார் பெரியகடை பகுதியில் மூடப்பட்ட வர்த்தக நிலையம், அதனை சார்ந்த பகதிகள், மன்னார் புதிய பேருந்து தரிப்பிடம் மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ் உட்பட விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply