வான், தரைவழி தாக்குதல்கள் – வெளியாகியுள்ள காணொளியால் ஏற்பட்டுள்ள பீதி! அடுத்த இலக்கு நோக்கி தயாராகிறதா சீனா?

பல ஆயிரக்கணக்கான சீன இராணுவத்தினர் அதி தீவிர பயிற்சியில் ஈடுபடும் காணொளி ஒன்று வெளியாகி பீதியை கிளப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீனாவின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகமே குறித்த காணொளியையும் வெளியிட்டுள்ளது.

அதில் தைவான் மாதிரியான ஒரு தீவை சீன இராணுவத்தினர் வான்வழியாகவும் தரை மூலமும் சுற்றிவளைத்து அதிரடி தாக்குதலை முன்னெடுப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், உளவு குற்றச்சாட்டுகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஒரு தைவானிய தொழிலதிபரிடமிருந்து சீனா வாக்குமூலம் ஒன்றை ஒளிபரப்பிய பின்னர், இந்த பயிற்சி தொடர்பிலான காணொளி வெளிவந்துள்ளது.

மேலும், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தைவான் சுயராஜ்யத்தின் கீழ் இருந்தாலும், சீனா தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது.

மட்டுமின்றி, தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்தி தைவானை சீனாவுடன் இணைக்கவும் தயாராக உள்ளது.

இருப்பினும், தைவான் சமயோசிதமாக செயல்பட்டு அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை கொண்டுள்ளது,

இது சீனாவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் அந்த பிராந்தியத்தில் வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு பலம் வாய்ந்த மோதலைத் தூண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆனாலும் ஒரே சீனா என்ற கொள்கையின் கீழ் தைவானையும் இணைக்கும் பொருட்டு, 2016 முதல் ஆட்சியில் இருந்துவரும் தைவானின் புதிய ஜனாதிபதிக்கு அரசியல் நெருக்கடியை அளித்து வருகிறது.

உள்நாட்டுப் போருக்குப் பின்னர் 1949 இல் தைவானும் சீனாவும் பிரிந்தன. இரு நாட்டுக்கும் இடையே விரிவான வணிக தொடர்புகள் இருந்தபோதிலும் உத்தியோகபூர்வ உறவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply