ஈரானின் முக்கிய தலைவருக்கு தொற்றியது கொரோனா

ஈரான் நாட்டின் அணு ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலிஹுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள அலி அக்பர் கடந்த 3-ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அந்நாடு மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளையும் விதித்து வருகிறது.

ஈரானில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளது. மேலும், ஈரான் நாட்டின் வங்கிகள் அமெரிக்காவில் வைத்துள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply