சஹ்ரானை பாதுகாத்தார் ஹிஸ்புல்லா -விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்

தனக்கு கிடைத்த தகவல்களின்படி, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தேசிய தவ்ஹீட் ஜமா அத்தின் (என்.டி.ஜே) தலைவர் சஹ்ரான் ஹாஷிமை பாதுகாத்துள்ளார், என முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் முன் கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சஹ்ரானுக்கும் காத்தான்குடி பொலிசாருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக ஜெயசுந்தர இதன்போது கூறினார். இவ்வாறு, மார்ச் 2017 இல் காத்தான்குடியில் உள்ள அலியார் சந்திப்பில் தவ்ஹீட் ஜமா அத் அமைப்புக்கும் சுன்னத்துல் வாலா ஜமாஅத் என்ற மற்றொரு அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அந்த பகுதிக்கு வெளியே உள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தி சம்பவம் தொடர்பில் தனி விசாரணைக்கு தான் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்போது உங்களின் விசாரணையில் அரசியல் தலையீடு இருந்ததா என்று ஒரு ஆணையர் சாட்சியைக் கேட்டார்.

அவ்வாறு செய்ய முயற்சிகள் நடந்ததாக சாட்சி கூறினார். சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெயரைக் கூற முடியுமா என்று கேட்டபோது, சாட்சி, ஹிஸ்புல்லா விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயன்றதாக தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

Be the first to comment

Leave a Reply