இலங்கையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில்​ கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மேலும் தீவிரமடையும் நிலைமை உருவாகியுள்ள நிலையில் நேற்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புதிய வைரஸ் தொற்று நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தகவல்களுக்கு இணங்க

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியரொருவருக்கு நேற்று வைரஸ் தொற்று புதிதாக இனம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 50 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை கந்தானை- ஜாஎல மின்சார சபைத் நிறுவனத்தில் பணி புரியும் 12 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்துள்ளது.

நேற்றைய தினம் 13 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 51பேர் வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் ருஹுணு பல்கலைக்கழக மாணவியொருவரின் தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அதனையடுத்து குறித்த மாணவி அத்துடன் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றுமொரு மாணவியும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

முற்றாக முடக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை எவரும் வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடர் மாடியில் பல முக்கிய பிரமுகர்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என். டி. பி. வங்கியின் மெரையின் டிரைவ் கிளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேற்படி வங்கிக்கிளைக்கு மினுவொங்கொடை பகுதியில் இருந்து வருகை தந்த பணியாளரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வங்கிக்கிளையை மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை அரச தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க இரு ஊடக நிறுவனங்களின் ஊழியர்களை பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச தொலைக்காட்சி சேவையொன்றில் 40 பணியாளர்கள் பி. சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி சிறுவர் தின நிகழ்சியொன்றில் கலந்துகொண்ட அரச தொலைக்காட்சி நிறுவனமொன்றின் பணியாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றும் தமது ஊழியர்களை பிசிஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply