மாணவிக்கு மறுக்கப்பட்ட அனுமதி ! உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அமைச்சர்

நிக்கவெரட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவியை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இலவச கல்வியினை வழங்கும் நாட்டுக்கு முரணானது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைப்பெற்ற புலமை பரிசில் பரீட்சைக்கு நிக்கவெரட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி தோற்ற குறித்த பாடசாலை அதிபரினால் அனுமதி வழங்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

எக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த மாணவி பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்க மறுத்துள்ளார் என்பது முதலில் அறியப்பட வேண்டும்.

விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply