வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவதற்கு காத்திருப்போருக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கை திரும்புவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுகை அச்சம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வரும் நடவடிக்கைகளுக்கான காலஅட்டவணை மறுசீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவன்கொடை கொவிட்-19 கொத்தணி காரணமாக நாட்டின் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்பியிருப்பதாகவும் இதனால் வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளுக்கான கால அட்டவணை தயாரிப்பு பணிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைகளை கருத்திற் கொண்டு இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான விமான பயணங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அட்மிரால் ஜயனாத்

Be the first to comment

Leave a Reply