யாழில் வயோதிப தம்பதியை கட்டி வைத்து திருடர்கள் கைவரிசை!

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் நேற்றிரவு வீடு புகுந்த திருடர்கள் தம்பதயினரை கட்டி வைத்து விட்டு நகை, பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 திருடர்கள் வீட்டிலிருந்த வயோதிப தம்பதியினரை கட்டி வைத்து, அவர்கள் சத்தமிடாதபடி வாய்க்குள் துணியை அடைந்து விட்டு, தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்த 16 பவுண் நிறையுடைய தாலிக்கொடி, சங்கிலி, மோதிரம், தோடு மற்றும் 25,000 ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

சின்னத்துரை தவமணி (70) என்ற மூதாட்டி பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply